வலிகளில் தெரியும் வழிகள்
கற்களாய் இருந்த நம்மை செதுக்கியது யார்? உருவம் கொடுத்தது யார்? செதுக்கினால் மட்டும் போதுமா? உருவம் கொடுத்தால் மட்டும் போதுமா? அன்னை கருவறை- என் வாழ்வின் முதல் அறை நான் கல்விசாலையில் படிக்க - அவள் வேலை செய்தாள் தொழிற்சாலையில் கல்லூரி நந்தவனத்திற்கு சென்றேன் - அவளும் சென்றாள் விறகு வெட்டியாக காடு என்ற வனத்திற்கு வேலைக்கு சென்றேன் இலஞ்சஒழிப்பு துறையில் அங்கே கேட்டார்கள் இலஞ்சம் கழற்றினாள் தாலியை என் தாய் திருமணம் ஆனது மனைவியும் வந்தாள் குழந்தைகளும் பிறந்தார்கள் என்றுமே என்னை கேள்வி கேட்காத என் அன்னை - அன்று ஒரே ஒரு கேள்வி கேட்டாள் மகனே! நீ இருக்க என் கருவறை ...