Posts

Showing posts from April, 2018

வலிகளில் தெரியும் வழிகள்

கற்களாய் இருந்த நம்மை செதுக்கியது யார்?                     உருவம் கொடுத்தது யார்?   செதுக்கினால் மட்டும் போதுமா? உருவம் கொடுத்தால் மட்டும் போதுமா?                                   அன்னை கருவறை- என்     வாழ்வின் முதல் அறை   நான் கல்விசாலையில்  படிக்க - அவள்  வேலை செய்தாள் தொழிற்சாலையில்   கல்லூரி நந்தவனத்திற்கு சென்றேன் - அவளும் சென்றாள் விறகு வெட்டியாக காடு என்ற வனத்திற்கு     வேலைக்கு சென்றேன் இலஞ்சஒழிப்பு துறையில் அங்கே கேட்டார்கள் இலஞ்சம்     கழற்றினாள் தாலியை என் தாய் திருமணம் ஆனது             மனைவியும் வந்தாள்     குழந்தைகளும் பிறந்தார்கள்   என்றுமே என்னை கேள்வி கேட்காத என் அன்னை  - அன்று ஒரே ஒரு கேள்வி கேட்டாள்                     மகனே!       நீ இருக்க என் கருவறை ...